பிரான்சு Vitry நகரத்தில் இன்று 17.05.2023 புதன்கிழமை பிற்பகல் 14.00 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு vitry நகர மண்டப முன்றிலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் Vitry நகர பிதா, துணை நகர பிதாக்கள், மாநகரசபை உறுப்பினர்கள், பிரெஞ்சு ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு எமது நினைவேந்தலின் நோக்கம் பற்றி அறிந்துகொண்டனர்.
Mr Pierre Bell-Lloch
Maire de Vitry sur seine
வித்றி சூர் சென் நகர முதல்வர்
Mr Albertino Ramaël
வித்றி சூர் சென் துணை நகர முதல்வர்
Relations internationales
சர்வதேச உறவுகள்
Mme Salima Souih
வித்றி சூர் சென் துணை நகர முதல்வர்
Végétalisation et biodiversité
தாவரங்கள் மற்றும் பல்லுயிர்
(Mme Bernadette Ebode Ondobo
வித்றி சூர் சென் துணை நகர முதல்வர்
Petite enfance
ஆரம்பகால குழந்தைப் பருவம்)
மற்றும் சுவாசி லு றூவா பிராங்கோ தமிழ்ச்சங்கத் தலைவர், உறுப்பினர்கள், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர், மற்றும் பொதுமக்கள், சுவாசி லு றூவா தமிழ்ச்சோலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் பங்குகொண்டு சுடர்ஏற்றி மலர்வணக்கம் செலுத்தி அகவணக்கம்செய்தனர்.
Vitry துணை நகர பிதாவும் சுடர்ஏற்றி மலர் வணக்கம் செய்து உரை நிகழ்த்தியிருந்தார்.
அவர் தனது உரையில், எமது தமிழின அழிப்புத் தொடர்பில் ஏனைய உறுப்பினர்கள், ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்திருந்தார்.
சுவாசி லு றூவா தமிழ்ச்சோலை மாணவர்களும் கலந்துகொண்டு பிரெஞ்சுமொழித் துண்டுப்பிரசுரங்களை வெளிநாட்டவர்களுக்கு வழங்கினர்.
அனைவருக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது. அத்தோடு முள்ளிவாய்க்கால் கஞ்சி தொடர்பாகவும் பிரெஞ்சு மொழியில் விளக்கமளிக்கப்பட்டது.
ஊடகவியலாளர்களும் அதனைப் பதிவுசெய்து எடுத்துச்சென்றனர்.