யாழ் மருத்துவமனைப் படுகொலை 28ஆவது வருட நினைவு!

0
542


யாழ்-மருத்துவமனைப்படுகொலை

இந்திய இராணுவத்தினர் 1987 அக்டோபர் 21-22 ஆம் நாட்களில் நடத்திய யாழ்ப்பாண மருத்துவமனைப் படுகொலைகளின் 28ஆவது நினைவுநாள் இன்றும் நாளையுமாகும்.யாழ்-மருத்துவமனைப்படுகொலை

யாழ்ப்பாணப் பொது மருத்துவமனையில் நுழைந்த இந்திய அமைதிப் படை இராணுவத்தினர் சரமாரியாகச் சுட்டதில் நோயாளிகள், தாதிகள், மருத்துவர்கள், மற்றும் பணியாளர்கள் 68 முதல் 70 பே ர் வரையில் கொல்லப்பட்டனர்.

 

தமிழீழ விடுதலைப் புலிகள், இலங்கை அரசு, மற்றும் மனித உரிமைக் குழுக்கள் போன்றவை இப்படுகொலைகளை இனப்படுகொலை எனக் கூறியுள்ளன.

அதே நேரத்தில் புலிகளுக்கும், இந்திய இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற சண்டைகளில் இடையில் அகப்பட்ட பொதுமக்களே கொல்லப்பட்டனர் என இந்திய இராணுவத்துக்குப் பொறுப்பான லெப். செனரல் டெப்பிந்தர் சிங் தெரிவித்தார்.

இத்தாக்குதலை மேற்கொண்ட இந்திய இராணுவத்தினர் எவரும் இந்திய அரசால் கைது செய்யப்படவில்லையாழ்-மருத்துவமனைப்படுகொலை-1

வட மாகாணத்தில் மக்கள் அடர்ந்து வாழும் யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களுக்கு அடிப்படை மற்றும் உயர்தர மருத்துவ வசதிகளை வழங்கும் ஒரேயொரு மருத்துவமனை ஆகும்.

ஈழப்போர்க் காலம் முழுவதும் இப்பகுதி போரில் ஈடுபடுபவர்கள் அணுகாத வண்ணம் பாதுகாக்கப்பட்ட ஒரு மருத்துவமனையாக இயங்கி வந்தது.

யாழ்-மருத்துவமனைப்படுகொலை-2

விடுதலைப் புலிகளுக்கும், இந்திய அமைதிப் படையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதை அடுத்து, யாழ் நகரை இந்திய இராணுவம் கைப்பற்றும் என்ற அச்சம் நிலவியது. இதனால் மருத்துவமனையின் ஊழியர்கள் சிலர் அச்சத்தில் பணிக்குச் செல்லத் தயக்கமடைந்த நிலையிலும் பலர் தமது கடமைகளுக்குச் சென்றிருந்தனர்.

1987 அக்டோபர் 21 தீபாவளி விடுமுறை நாளாகும். அன்றும் முதல் நாட்களிலும் குடாநாட்டின் பல்வேறு பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற இந்திய இராணுவத்தினரின் ஏவுகணை வீச்சுகளில் இறந்த 70 இற்கும் அதிகமான பொதுமக்களின் இறந்த உடல்கள் மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here