பிரான்சு சுவாசி லு றூவா நகரத்தில் இடம்பெற்ற முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

0
154

 

பிரான்சு Choisy le roi நகரத்தில் இன்று 16.05.2023 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 14.00 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு Choisy le roi நகர மண்டப முன்றிலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில்

Mr Tonino Panetta
Maire de Choisy le roi
சுவசி லு றுவா நகர முதல்வர்

Mme Sushma Ostermeyer
சுவசி லு றுவா உப நகர முதல்வர்
Culture – Patrimoine historique – Mémoire – Anciens Combattants – Droits de l’Homme
(கலாச்சாரம் – வரலாற்று பாரம்பரியம் – நினைவகம் – படைவீரர்கள் – மனித உரிமைகள்)

மற்றும் சுவாசி லு றூவா பிராங்கோ தமிழ்ச்சங்கத் தலைவர், உறுப்பினர்கள், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர், தமிழ்ச்சங்க கூட்டமைப்பு பொறுப்பாளர் மற்றும் பொதுமக்கள், சுவாசி லு றூவா தமிழ்ச்சோலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் பங்கு கொண்டு சுடர்ஏற்றி மலர்வணக்கம் செலுத்தி அகவணக்கம் செய்தனர்.

Choisy le roi நகர பிதாவும் சுடர்ஏற்றி மலர் வணக்கம் செய்து உரை நிகழ்த்தியிருந்தார்.

அவர் தனது உரையில், சுவாசி லு றூவா நகரில் 20 இன மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர். இவர்களில் தமிழ் மக்கள் பற்றியும் நான் நன்கு அறிவேன் எனத்தெரிவித்த அவர் இவ்வாறான நிகழ்வுகளுக்குத் தனது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார்.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு. மேத்தா அவர்களும் நினைவுரை‌ஆற்றியிருந்தார்.

சுவாசி லு றூவா தமிழ்ச்சோலை மாணவர்களும் கலந்துகொண்டு, மே18 நினைவேந்தல் நிகழ்வில் தம்மைப் போன்ற இளையோரை கலந்துகொள்ளுமாறு பிரெஞ்சு மொழியில் கேட்டுக்கொண்டனர்.

அனைவருக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.

பிற்பகல் 17.00 மணிக்கு தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here