
அனைவருக்கும் எழுச்சிகர வணக்கம்! தமிழின அழிப்பிற்கான நீதி வேண்டிய இறமைகொண்ட தமிழீழ தனியரசுக்கான விடுதலைப்பயணத்தில் இன்று 15.05.2023 பிரித்தானிய பாராளுமன்றத்தில் அனைத்துலக தமிழீழ மக்களின் அரசியற் செயற்பாட்டாளர்கள், துறைசார் பேருரையாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் மாநாடு நடை பெறுகின்றது. தமிழின அழிப்பின் வலிசுமந்த காலமொன்றில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு இம்மாநாடு அதி உச்சமான தீர்மானங்களை முன்மொழிந்து சர்வதேசத்திற்கு வழங்குகின்றது. தமிழினத்தின் இத்தனை அவலங்களுக்கும், அழிவுகளுக்கும் சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டு சென்ற பிரித்தானியா தேசம் இனியாவது தமிழ்மக்களின் இறமையை, சுயநிர்ணய உரிமையை, தனித்தேசத்தை அங்கரிக்க வேண்டும் இதுவே தாயகத்திலும், சர்வதேசம் எங்கும் வாழும் தமிழர்களின் வேணவா என்பதை கலந்து கொண்டவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த மாநாட்டில் சர்வதேசமெங்கும் வாழும் தமிழர்கள் பங்கு கொள்கின்றனர். பிரான்சு தமிழீழ மக்கள்பேரவையினர், தமிழ் இளையோர்கள் பங்கு கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.