நினைவேந்தலுக்கு தயாராகும் முள்ளிவாய்க்கால் முற்றம்!

0
108

தமிழின படுகொலைகளின் போது உயிர் நீத்தவர்களையும், உணவின்றி வறுமையில் சிக்கியபோது கஞ்சியை மட்டுமே உட்கொண்டு வாழ்ந்த போர்க்கால வாழ்க்கையையும் நினைவுகூரும் வகையில், இந்த வாரம் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறல் வாரமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

2009ஆம் ஆண்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் இந்த ஆண்டும் நினைவேந்தல் நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மே 12 முதல் மே 18 வரை அனுஷ்டிக்கப்பட்டு வரும் இனப்படுகொலை வாரத்தின் முதல் நாளான நேற்றுமுன்தினம் மாலை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மக்களும் சிவில் அமைப்பு பிரதிநிதிகளும் இணைந்து வடக்கு, கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பின் ஏற்பாட்டில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டதோடு, முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here