முள்ளிவாய்க்கால் தமிழினஅழிப்பின் வலிசுமந்த 14 ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு இன அழிப்புக்கு நீதி கோரிய கவனயீர்ப்பு நிகழ்வு பிரான்சு பரிசுக்கு அண்மையில் உள்ள நொசிலி செக் நகரத்தின் இன்று 13.05.2023 சனிக்கிழமை பிற்பகல் 14.00 மணியளவில் இடம்பெற்றது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, மற்றும் நொசிலி செக் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில்
மாநகரமுதல்வர் மற்றும் துணைமுதல்வர்,கலாசார பொறுப்பாளர் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டதோடு, தமிழ்ச்சங்கங்களிகூட்டமைப்பும் பொறுப்பாளர், பரப்புரைப் பொறுப்பாளர்,சங்க தலைவர்,தமிழ்ச்சோலை ஆசிரியர்களும் பள்ளி மாணவர்களும் பங்குபற்றியிருந்தனர். நினைவுரைகளும் ஆற்றியிருந்தனர்.













































