முள்ளிவாய்க்கால் தமிழினஅழிப்பின் வலிசுமந்த 14 ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு இன அழிப்புக்கு நீதி கோரிய கவனயீர்ப்பு நிகழ்வு பிரான்சு பரிசுக்கு அண்மையில் உள்ள பொண்டி நகரத்தின் மாநகரசபை முன்றிலில் இன்று 13.05.2023 சனிக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, மற்றும் பொண்டி தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பில் படுகொலைசெய்யப்பட்ட உறவின் சகோதரர் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார். அகவணக்கத்தைத் தொடர்ந்து அனைவரும் சுடர்ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.
நினைவுரைகளும் இடம்பெற்றன.