‘வீரச்சாவின் பின்
வித்துடல் விதைக்க வேண்டியது
எத்துயிலும் இல்லத்தில்..?’
எனும் கேள்விக்கு
தலைமைச் செயலக அறிக்கையில்
தமிழினி சொன்ன பதிலெதுவோ..
தேசத்தின் புற்றுநோயை
தீர்த்திடப் போனவளை
புற்றுநோய் தீர்த்ததென்ன..
‘தாயகக் கனவுடன்
சாவினைத் தழுவிய’ பாடலின்றி
‘சூரிய தேவனின் வேருகளே..’
பூவிடும் பாடலின்றி
வித்துடல் என்றிடும்
வீரப் பேரின்றி
மண்ணுள் மறைகிறதே(மண்ணில் எரிகிறதே)
மாவீரப் பெண்ணுடல்..
சிவகாமியாய் பிறந்து
தமிழினியாய் இருந்து
சிவகாமியாய் இறந்து
இப்போ தமிழினியாய் வாழ்ந்து..
இரு பெயரும்
தமிழினத்தின்
திருப்பெயர் அன்றோ
வித்துடல்களை
பூதவுடல்களாக்கலாம்..
துயிலும் இல்லப் பூக்கள்
சுடுகாட்டில் பூக்கலாம்..
‘தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ…?