எம் உயிரினும் மேலான மக்களே
உங்களை நாம் ஆழமாகவே காதலித்தோம்
எம் ஆசைகளை துறந்து உங்களை நேசித்தோம்
எம் இறுதி மூச்சுவரை உங்களுக்காக போராடினோம்
என்றும் எம் பாசத்திற்குரிய மக்களே!
எப்போதும் நீங்கள் விழிப்பாயிருங்கள்
எங்கள் எண்ணங்கள் உங்களை சுற்றியே
வட்டமிடுகின்றது
எங்களின் கனவு நிறைவேறும்வரை எங்களின் துடிப்பு
உங்களுக்காகவே துடித்துக்கொண்டிருக்கின்றது
எமது நுண்ணறிவோ உங்களுக்கு ஏற்படப்போகும்
இன்னல்களை முற்கூட்டியே தெரிவித்துக்கொள்கின்றது
எம் பாசமான மக்களே விழிப்பாயிருங்கள்
தேசத்தின் மீதான விட்டுக்கொடுப்பற்ற அர்பணிப்பால்
நாம் இன்று மரணித்து விட்டோம்
எமது உடலங்கள் மீது எதிரியின் கனரக
வாகனங்கள் இன்றும் பயணித்துக்கொண்டுள்ளது
நாம் விதைக்கப்பட்ட இடங்களில் எதிரியின் காலணி
படும்போதெல்லாம் உடலற்ற
அந்த உயிர் சுடுகுழல்களை ஏந்திக்கொண்டு
எதிரியின் நெஞ்சில் குறிபார்த்துக்கொண்டு
நிற்கின்றது
நெருப்பை சுமந்துள்ள உயிர்கள் என்றும்
இறப்பதே இல்லை
எம் பாசத்துக்குரிய மக்களே
விழிப்பாயிருங்கள்
யுத்தம் என்றால் உங்களை நீங்கள் பாதுகாப்பதற்கு
தயாராவே இருங்கள்
எப்போதும் எல்லைப்புற மக்களே நீங்கள்
அவதானமாக இருங்கள்
இரத்தக் காட்டேரிகள் எந்த நேரத்திலும் உங்களின்
கதவை தட்டி இரத்தம் குடிக்க
தயங்கிடப்போவதில்லை
எம் மக்களே விழிப்பாயிருங்கள்
ஐந்துவருடம் அரசியல் நாற்காலிக்காக
சண்டையிடும் அரசியல்வாதிகளை நம்பாதீர்கள்
ஒவ்வொரு சுழற்சிக்குள்ளும் உள்ள சக்கர
வியூகங்களை ஆழமாகவே அறிந்துகொள்ளுங்கள்
பொறுப்பற்ற செய்திகளை குறுகிய சிந்தனை ஓட்டத்தில்
பரப்பிவிடும் தமிழர்களிடம் எப்போதும் விழிப்பாயிருங்கள்
எம் மக்களே விழிப்பாயிருங்கள்
எம் கனவுகள் நினைவாகும் காலம் கனிந்துவிட்டது
ஆகையால் அன்பானவர்களே !
அத்தனை துன்பத்திலும் நாம் நாளை விடியலை சுவாசிப்போம்
என்பதற்காக நீங்கள் சந்தோசமாயிருங்கள் .. என்று
“முள்ளிவாய்க்கால்” எமக்கு பல பாடத்தை கற்றுத்தந்துள்ளது. பலரை இனம் காட்டியுள்ளது. எமது மக்களை எம் கண்களில், மனங்களில் வைத்து இன்னும் ஆழமாக நேசி என்று சொல்லிவிட்டு சென்றுள்ளது. மறக்க வேண்டாம்.
பாரிசில் 18/05/2023 (வியாழக்கிழமை) ( விடுமுறைநாள்)
“முள்ளி வாய்க்கால்” நினைவேந்தல், கவனயீர்ப்பு ஒன்றுகூடலில் பங்கு கொள்வோம். மற்றவர்களையும் பங்கு கொள்ள வைப்போம்.
Place de Bastille /14h
( அனைவருக்கும் பகிரவும் பரப்புரை செய்யவும்.
நன்றி. தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழீழ மக்கள் பேரவை,
தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு