லண்டனில் உதைப்பந்து வயிற்றில் பட்டு இலங்கை சிறுவன் உயிரிழந்துள்ளார்!

0
219

siruvanவிளையாடிக் கொண்டிருக்கும் வேளை உதைப்பந்து பட்டு வயிற்று வலியால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இலங்கை சிறுவன் ஒருவர் பிரித்தானியாவில் உயிரிழந்துள்ளார்.

சுஜென்த் ஜெயகுமார் என்ற 14 வயது சிறுவன் கடந்த செவ்வாய்கிழமை வடக்கு லண்டனில் ஹரோவில் உள்ள தனது பாடசாலையில் உதைப்பந்தாட்ட பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கோல்காப்பாளரால் உதைக்கப்பட்ட பந்து சிறுவனின் வயிற்றில் பட்டுள்ளது.

அதனை அடுத்து சிறுவன் நோர்த்விக் பார்க் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் பெடிங்டனில் உள்ள சென்.மேரிஸ் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

அங்கு அவர் எதிர்பாராத விதமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். .

உயிரிழப்பதற்கு முன்னர் சுயநினைவில் இருந்த சிறுவன் தனது தந்தையான 52 வயதுடைய ஜெயகுமாருடன் சிரித்து பேசிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

´எனது மகள் அற்புதமானவர். அன்பானவர். உதைப்பந்தாட்டத்தை அவர் பெரிதும் விரும்பினார். நல்ல வீரர். எல்லா வழிகளிலும் உறுதியானவர். அவர் காயமடையும் பேதெல்லாம் நான் எதுவும் கூறினால் அவர் என்னை தைரியப்படுத்துவார்´ என தந்தை ஜெயகுமார் கூறியுள்ளார்.

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஜெயகுமார் குடும்பம் 7 வருடங்களுக்கு முன்னர் பிரான்ஸிற்கு சென்றுள்ளனர். மகனின் சிறந்த கல்வி வாய்ப்பு கருதி இவர்கள் லண்டனுக்கு சென்றமை குறிபப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here