தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுத் தலைவியாக இருந்த தமிழினி மரணம்!

0
325

imageதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுத் தலைவியாக இருந்த தமிழினி என்று அழைக்கப்படும் சிவசுப்ரமணியம் சிவகாமி இன்று அதிகாலை புற்றுநோய் தாக்கத்தினால் மகரகம மருத்துவமனையில் 3.15 மரணம் அடைந்துள்ளார்.

கிளிநொச்சி, பரந்தன் பிரதேசத்சைத் சேர்ந்த தமிழினி, 1991இல் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து, விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல்துறை பொறுப்பாளராக நீண்டகாலம் பணியாற்றியவர்.

போரின் இறுதியில் ஓமந்தையில் வைத்து சிறிலங்கா படையினரால் கைது செய்யப்பட்ட பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு நடவடிக்கைகள் நிறைவுபெற்ற நிலையிலேயே 2013 ஜூன் மாதம் விடுதலை செய்யப்பட்டர்.

புனர்வாழ்வு நடவடிக்கையின் போது சிங்கள இராணுவத்தின் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி சுகயினமுற்று இருந்தார்.

கடந்த நாட்களாக புற்றுநோய் தாக்கத்தினால் ஆவதிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மரணம் அடைந்துள்ளார். இறுதி நிகழ்வு பரந்தனில் நடை பெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here