கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் வன்னியில் இடம்பெற்ற இறுதி
யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிறிலங்கா இராணுவத்தினரால்
கொன்றுகுவிக்கப்பட்ட பேரவலத்தை நினைவு கூரும் வகையில், ஒவ்வொரு வருடமும் மே2ம் திகதியிலிருந்து மே 18ஆம் நாள் வரையான காலப்பகுதியில்
‘முள்ளிவாய்க்கால்’ ( தமிழினஅழிப்பு ) நினைவேந்தல் நினைவுகூரப்பட்டு வருகின்றது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் ஒரு குறுகிய பிரதேசத்துக்குள் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட இறுதி நாட்களை
‘முள்ளிவாய்க்கால் நினைவு காலமாக’ தமிழ் மக்களால் நினைவுகூரப்பட்டு
வருகின்றது. குறிப்பாக புலம்பெயர் தேசமெங்கும் பரவியிருக்கும் தமிழ்
உறவுகளால் மே12ம் நாள் முதல் மே18 வரை நினைவு வாரமாகவும்
நினைவுகூரப்படுகின்றது.
இந்த நாட்களில் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் நரபலி எடுக்கப்பட்டு,
தமது இன்னுயிர்களை இழந்த எது உறவுகளையும், சிங்களத்தின் ஆக்கிரமிப்பைஎதிர்த்து நின்று போராடி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட அனைத்துமாவீரர்களையும், இந்நாட்களில் நினைவேந்தி வணக்கமும், ஒளியும்ஏற்றுவோம்!! ஆரம்பமாகின்ற முள்ளிவாய்கால் தமிழ் இனவழிப்பு
நினைவேந்தல் மாதத்திலும், வாரத்தில்ரூபவ் அனைவரும் ஒற்றுமையாக, எந்தபேதங்களிமின்றி இணைந்து நினைவேந்தலைக் கடைப்பிடிக்க வேண்டும்.
நினைவேந்தல்வாரத்தில், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் துடிதுடித்துப் பதைபதைத்து போன,துன்பகரமான இந்நாட்களை, ஆடம்பரங்களையும் களியாட்ட நிகழ்வுகளையும்தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்வதோடு, கொத்துக் கொத்தாகக்கொல்லப்பட்ட உறவுகளின், சொந்தங்களின் வலிகளிலும் நாம் பங்கெடுத்துக்கொள்வது தன்மானமுள்ள அனைத்து உறவுகளின் கடமையாகும்.
மே 18ம் நாள் முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவாக சுடரேற்றி வணக்கம்
செலுத்துவதோடு மட்டுமல்லாமல், உலகப் பரப்பெங்கும் உங்களுக்கு அருகில்
நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கெடுத்து, இறுதித் தருணத்தில் எந்தவிதஅஞ்சலிகளும், சடங்குகளும் இன்றி உயிரிழந்த அனைத்து உறவுகளையும்இத்தருணத்தில் நினைவு கொள்ளவேண்டும். இதற்காக எல்லோரையும் அன்புடனும்,உரிமையுடனும் அழைக்கின்றோம். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் காலத்தில்இறை நம்பிக்கை உடையவர்கள், தங்கள் உறவுகளின் ஆன்ம ஈடேற்றத்திற்காக
ஆத்மசாந்திக்காக கோயில்கள், தேவாலயங்களில் வழிபாடுகளை நடத்தலாம்.
கூட்டுணர்வுடன் கூடிய நினைவேந்தல்கள், தலைமுறைகள் தாண்டி நீடித்து நிலைக்கக்கூடியவை. அவை, சார்ந்த சமூகங்களுக்கான கடப்பாடுகளை மீள மீள வலியுறுத்தி வருவன.அதனை தக்க வைத்தல் என்பதே வரலாற்றில் வெற்றியை உறுதி செய்யும்.ஒப்பீட்டளவில் இத்தருணத்தில் தாயகத்திலுள்ள மக்களுக்கு உணர்வுபூர்வமாக பெரும்ஆறுதலை, புலம்பெயர் சமூகம் தொடர்ந்து வழங்கிக்கொண்டிருக்க வேண்டும்.
இங்குஆறுதல் என்பது வலிகளைப் பகிர்ந்து கொள்வது மாத்திரமல்ல. தாயகத்திலுள்ளமக்கள் எதிர்கொண்டு நிற்கும் வாழ்தலுக்கான சவால்களையும் பகிர்ந்துகொள்வதாகும், அத்துடன் அநியாயமாக இழக்கப்பட்ட இந்த உறவுகளுக்காக, நீதிவேண்டி தொடர்ந்து எம்மால் முடிந்தளவு போராட வேண்டும்.
நமது மக்கள் அடைந்த துயரத்தையும் துன்பத்தையும் அவலத்தையும் நமக்குள்உயிர்ப்பாய், உள்வாங்கி நாம் ஒரு தேசமாக பாதுகாப்பாகவும் கௌரவமாகவும்வாழ்வதற்கு சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசினை அமைப்பதேஒரேவழி என்பதனை நமக்குள் நாமே உறுதிபூண்டு கொள்வோம்!!
இந்நாட்களில் பிரான்சின் அனைத்து நகரங்களிலும் நடைபெறும்
‘முள்ளிவாய்க்கால்’ நினைவேந்தல் நிகழ்வில் பங்கு கொள்ளுமாறும், எதிர்வரும் 18.05.2023 வியாழக்கிழமை பகல் : 2.00 மணிக்கு பாரிசில்
பஸ்தில் Place de la Bastille திடலில் எம்மால் ஏற்பாடு செய்யப்பட்டமுள்ளிவாய்க்கால் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல், கவனயீர்ப்பு ஒன்றுகூடலிலும்குடும்பமாக வந்து கலந்து தமிழீழ மக்களின் மனதில் வரலாற்று வீரத்தை தந்தமானத்துடன் மண்னை முத்தமிட்ட அனைவரையும் மனதில் ஏற்றி மதிப்புச்செய்வோம் வாருங்கள்.
தமிழீழ மக்கள் பேரவை – பிரான்சு