தொழிலாளர் நாள் மே 1 பிரான்சு பாரிசு றிப்பப்ளிக் பகுதியில் ஒன்றுகூடுவோம்!

0
136

அன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்களே!
தொழிலாளர் நாள் மே 1 திங்கட்கிழமை பிரான்சு பாரிசு றிப்பப்ளிக் என்னும் Place de la Republique இடத்திலிருந்து 13.00 மணிக்கு புறப்படவுள்ள பல்வேறு தொழிலாளர் சங்க அமைப்புகளுடனும், விடுதலை அமைப்புகளுடனும் நாமும் பங்கெடுத்துக் கொள்வோம்.
• 75 ஆண்டுகளாக எமது மண்ணில் நடைபெற்ற தமிழின அழிப்புக்கு நீதி கோரியும்
• அங்குலம் அங்குலமாக தமிழர் நிலம் பறிபோய்க்கொண்டிருப்பதையும்,
• புத்த சமயம், சாசனம் பாதுகாக்கப்பட வேண்டும் சிங்கள அரசின் சனாதிபதி சூழ்உரைக்கு ஏதுவாக இந்து, சைவக்கோயில்கள் இடித்து அழிக்கப்பட்டு, புத்தர்சிலைகளும், பௌத்த விகாரைகளும் அடாத்தாக உருவாகுவதையும்,
• சொந்த நிலத்தை விட்டு புலம்பெயராது தம் தீவுப்பகுதிகளில் வாழுகின்ற எம் மூதாதையர்கள் சிங்கள இராணுவ கூலிப்படைகளால் படுகொலை செய்து அவர்களை பயமுறுத்தி தீவைவிட்டு வெளியேற்ற செய்வதையும்,
• இளைஞர்கள், யுவதிகள் மத்தியில் போதைபொருட்களையும் கொடுத்து பாவிக்க வைத்து வன்முறைகளைத் தூண்டி பெற்றவர்களையே படுகொலை செய்யும் செயற்பாடுகளை ஏற்படுத்துவதையும்,
• சிறீலங்கா அரசின் பயங்கரவாதச்சட்டம் மாற்றமடைய வேண்டும் என்ற சர்வதேசம் கொடுத்த அழுத்தத்துக்கு மதிப்பளிப்பதாகக் கூறிக்கொண்டு இன்னும் கொடியதும், அனைத்து மக்களையும், தொழிலாளர்களையும், அனைத்துத் தரப்பினையும் பாதிக்கும் புதிய சட்டங்களை உருவாக்கி அதனை அமுல்படுத்த சிங்கள தேசம் முற்படுவதையும்
• புதிய பயங்கரவாத சட்டத்திற்கு எதிராக சிறீலங்கா தேசத்தில் ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியும், அனைத்து தமிழ்அரசியல் கட்சிகளும் மூவின மக்களும் சேர்ந்து நடாத்துகின்ற பணிப்புறக்கணிப்பு, கடையடைப்பு, பேரணிப் போராட்டங்களுக்கு ஆதரவு நல்கியும் இந்நாளில் பங்கெடுப்போம்.

பிரான்சு வாழ் தமிழீழ மக்களே! தொழிலாளர்களே! நாம் அனைவரும் தமிழீழ தேசியத் தலைவரின் திருவுருவப்படத்தின் பின்னாலும், எம் தேசத்தின் கொடியுடனும், எமது மக்களின் கோரிக்கைகளின் பதாதைகளுடனும், இந்த மாபெரும் பேரணியில் பங்குகொள்ளுவோம். எமது தாயக மக்களின் உணர்வுகளில் பங்கெடுத்துக் கொள்வோம் வாருங்கள்.
குறிப்பு : பல இலட்சம் மக்கள் பங்குகொள்ளும் இப்பேரணியில் ஏனைய நாட்டு அமைப்புகளுடன் நாமும் முன்னிடத்தைத் தக்க வைத்துக்கொள்ள ஊர்வலம் ஆரம்பிக்கும் இடத்திற்கு முற்கூட்டியே எமது மக்களை அணிதிரளுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு- மற்றும் பிரான்சு ஏனைய கட்டமைப்புகளும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here