தமிழ் அரசியல் கைதிகளிற்கு ஆதரவாக கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்!

0
228

n,,;

jpegசிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில், சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அரசியல் கைதிகளிளிற்கு ஆதரவாகவும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் இன்று ஏ9 வீதியில் உள்ள பழைய மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றது.

இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமான இப் போராட்டம் பழைய மாவட்ட செயலக முன்பாக இருந்து மாவட்ட செயலகம் வரை பயணித்து ஜனாதிபதிக்கு கிடைக்கும் வகையில் மகஜரும் கையளிக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட மேலதிக அ.அதிபர் ப.சத்தியசீலனிடம் மகஜர் மதகுருக்களால் கையளிக்கப்பட்டது.

இக்கவன ஈர்ப்பு போராட்டத்தில் இறுதி யுத்தத்தில் தமது உறவுகளை தொலைத்தவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீண்ட காலமாக அரசியல் கைதிகள் சிறையில் உள்ளதாகவும், அவர்கள் தற்போது உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் 20 மேற்பட்டடோர் தமது உடல் நலம் குன்றிய நிலையில் காணப்படுவதாகவும் தமிழ்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

அவர்களின் விடுதலை தொடர்பிலும், பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பிலும் அரசாங்கம் நல்ல முடிவினை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர், இப்போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here