பிராங்கோ நெவர் தமிழ்ச்சங்கமும், நெவர் தமிழ்ச்சோலையும் இணைந்து 22-04-2023 அன்று சனிக்கிழமை 15:00 மணியளவில் தாயகத்தாய் அன்னை பூபதியின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
பொதுச்சுடரினை தமிழ்ச்சங்க உறுப்பினர் ஏற்றிவைக்க, அன்னை பூபதியின் திருவுருவப்படத்துக்கு தமிழ்ச்சங்க உறுப்பினரும், மணலாற்றில் சிறிலங்காப் படையினருடான மோதலில் வீரச்சாவடைந்த வீரவேங்கை டென்சியாவின் சகோதரர் ஈகைச்சுடரேற்றி, மலர்வணக்கம் செலுத்தினார்.
தொடர்ந்து தமிழ்ச்சோலை மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து நெவர் தமிழ்ச்சங்க விளையாட்டுத்துறை பொறுப்பாளர் தாயகத்தாய் அன்னை பூபதி தொடர்பாக உரையாற்றி இருந்தார். இறுதியாக “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற பாடலுடனும் “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.