நபிரான்சில் பாரிசின் புறநகரில் உள்ள சுவாசிலே றுவா பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் தமிழ்ச்சோலை மாணவர்களிடையே நடைபெற்ற மாவீரர்களான தியாக தீபம் திலீபன் ,கப்டன் மில்லர் இல்லங்களுக்கிடையேயான மெய்வல்லுநர் போட்டிகள் நடைபெற்றிருந்தன. சீரற்ற காலநிலையால் காலை தொடர் மழை பெய்து நண்பகல் போட்டிகள் ஆரம்பிக்கும் நேரத்தில் முற்றுமுழுதாக மழை நின்று சூரிய ஒளி வீசத்தொடங்கியது. மாணவர்கள் மிகுந்த உற்சாகம் கொண்டு போட்டிகளில் பங்கு கொண்டனர். பிரெஞ்சு தேசியக்கொடி, தமிழீழ தேசியக்கொடி, மற்றும் தமிழ்ச்சோலைக் கொடியுடன் இல்லக்கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டன. தொடர்ந்து மாவீரர் திருவப்படங்களுக்கு மாவீரர்களின் சகோதரர்கள் ஈகைச்சுடர் ஏற்றி , மலர் வணக்கம், அகவணக்கம் செய்திருந்தனர். அடுத்து ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைக்கப்பட்டது. நிகழ்வில் சிறப்பாக கலந்து கொண்ட வித்திறி சூசென் உதவி முதல்வர் மற்றும் சுவாசிலே றுவா சர்வதேச மக்கள் தொடர்பாளர் கலந்து கொண்டு வாழ்த்துதல்களையும் தெரிவித்தனர். இரவு 8:00 மணிவரை போட்டிகள் நடைபெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள், வெற்றிக்கிண்ணங்கள் வழங்கப்பட்டன. அப்பிரதேச மக்கள் குழந்தைகள் பலர் கலந்து கொண்டனர். போட்டிகளில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர், மற்றும் துணைப்பொறுப்பாளர், பரப்புரைப் பொறுப்பாளர் மற்றும் தமிழ்ச்சங்க கூட்டமைப்பின் உறுப்பினர்கள், தமிழ்ச்சோலை தலைமைப் பணியகப் பொறுப்பாளர், ஏனைய நகர லதமிழ்ச்சோலை நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் பதக்கங்கள், வெற்றிக்கிண்ணங்கள் வழங்கியிருந்தனர்.



































