அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் போராட்டம்!

0
292

சிறீலங்கா அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியான விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வியாழக்கிழமை(15-10-2015) யாழ் பஸ் நிலையம் முன்பாக காலை 10.30 மணி தொடக்கம் 11.30 வரை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போராட்டத்திற்கு அக் கட்சியின் வடமாகாண இணைப்பாளர் செல்வம் அவர்கள் தலைமை தாங்கினார்.

மேற்படி போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் மற்றும் கட்சி அங்கத்தவர்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

unnamed-11-600x399 unnamed-12-600x399 unnamed-13-600x399 unnamed-15-600x399

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here