தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில் அன்னைபூபதித் தாயின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் அஞ்சலி நிகழ்வு இன்று புதன்கிழமை(19-04-2023) முற்பகல்-11.30 மணியளவில் யாழ்.கொக்குவில் கிழக்கில் அமைந்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும், சட்டத்தரணியுமான க.சுகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொருளாளர் கனகையா கிருஷ்ணகுமார் ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து அன்னை பூபதித் தாயின் உருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி உணர்வுபூர்வ அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து எழுத்தாளரும், தமிழ்த்தேசியப் பற்றாளருமான மு.ஈழத்தமிழ்மணி நினைவுரை நிகழ்த்தினார்.
கிழக்கில் அமைந்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்றது.