மீனவர் பிரச்சினை தொடர்பில் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம்!

0
181

jeyaஇலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுதலை செய்வதற்கு உடனடி நடவடிக்கைஎடுக்குமாறு வலியுறுத்தி தமிழக முதல்வர் பிரதமர் நரேந்திர மோடிக்கு மீண்டும் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

கடல் எல்லையை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 87 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் மீனவர்களின் 39 மீன்பிடி படகுகளும் இலங்கை கடற்படையினர் வசமுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்களும் தொடர்ந்து கைது செய்யப்படுவது அவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பறிக்கும் செயலாகும் எனவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் வலியுறுத்தியுள்ளார்.

இந்த பிரச்சினையை உடனடியாக இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று ராஜதந்திர நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமது கடிதத்தின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

இது போன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும் எனவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தமது கடிதத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here