பூநகரியில் மக்கள் முற்றுகை போராட்டம்! நில அளவையாளர்கள் விலகல்!

0
165

Ananth(267)படைமுகாமிற்கென நிலங்களை சுவீகரிக்கும் இலங்கை அரசினது முயற்சி மக்களது எதிர்ப்பினையடுத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இன்றைய தினமும் பூநகரியின் வாடியடி பகுதியினில் படையினரது முகாம் அமைநதுள்ள காணிகளை சுவிகரிக்கும் முயற்சிகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.இதனையடுத்து படைமுகாம் முன்பதாக காணி உரிமையாளர்கள்,பொதுமக்கள் குவிந்திருந்ததுடன் முற்றுகை போராட்டமொன்றையும் முன்னெடுத்திருந்தனர்.

எனினும் காணிகளை சுவீகரிக்க ஏதுவாக நில அளவைப்பணிகளை மேற்கொள்ள நிலஅளவை திணைக்களத்தினர் வருகை தருவரென ஆர்ப்பாட்டகாரர்கள் எதிர்பார்த்திருந்தனர்.எனினும் மக்களது தொடர்ச்சியான எதிர்ப்பினையடுத்து நில அளவீட்டுப்பணிகளை தற்காலிகமாக நிறுத்துவதாக நில அளவை திணைக்களம் பிரதேச செயலகத்திற்கு தகவல் அனுப்பியிருந்தது.

இதனையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் போராட்டத்தை விலக்கி வெளியேறிவிட்டனர்.

கடந்த சில தினங்களாக பூநகரி,கிளாலியென படைமுகாம்களிற்கென நில சுவீகரிப்பு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை தெரிந்ததே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here