அமைதிப்படை என்ற போர்வையில் தமிழர் தாயகத்திற்கு வந்திறங்கிய இந்தியப்படைகள் பல்லாயிரம் தமிழர்களை கொன்று அட்டூழியம் செய்துகொண்டிருந்த நேரத்தில்..
இந்திய ஆதிக்கத்திற்கு எதிராக நீர்மட்டுமே அருந்தியவாறு ஒரு மாதகாலமாக இந்தியப்படைகளுக்கு எதிராக அகிம்சைப்போர் புரிந்து, தமிழர்களின் விடுதலைக்காக தன்னியிர் ஈந்த
“தியாகத்தாய் அன்னை பூபதி” அவர்களின் நினைவு சுமந்த ஊர்திப்பவனி யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் நினைவிடத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி ஆரம்பமாகி சென்று கொண்டிருக்கிறது.
வழித்தடத்தில் மல்லாவி நகரை அடைந்த ஊர்தி மல்லாவி நகரில் மக்கள் அஞ்சலிக்காக தரித்து நின்றது. பின்னர் ஆலங்குளம் துயிலும் இல்லத்தின் முன்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் அங்கிருந்து அனிஞ்சியன் குளம் பகுதியில் அமைந்திருக்கும் ஆழ ஊடுருவும் படையின் கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் சிவனேசன் அவர்களின் நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன் பின்னர் வன்னிவிளாங்குளம் துயிலும் இல்லத்திலும் அஞ்சலி செலுத்தப்பட்ட பின் நாளைய பயணத்துக்காக இருப்பிடம் நோக்கி சென்றது பூபதியம்மா நினைவு சுமந்த ஊர்தி…