கிறிஸ்தவர்களின் புனித தினமான பெரிய வெள்ளி தினம் இன்று!

0
132

கிறிஸ்தவர்களின் புனித தினமான பெரிய வெள்ளி தினம் இன்று உலகளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படும் நிலையில், தமிழர் தாயகத்தில் உள்ள அனைத்து கிறிஸ்த தேவாலயங்களிலும் சிறப்பு ஆராதனைகள் இடம்பெற்றன.
மட்டக்களப்பு நகர் பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் விசேட ஆராதனைகளும், இயேசு பிரானின் பாடுகளை குறிக்கும் திருச்சிலுவைப்பாதை பிரதான நிகழ்வுகளும் ஆலய அருட்தந்தையர்கள் தலைமையில் இன்று காலை இடம்பெற்றன,
மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயம், தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலயம், இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலயம், கூழாவடி புனித அந்தோனியார் ஆலயம்,
சகாயபுரம் தூய சதா சகாய அன்னை ஆலயம், புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆகிய ஆலயங்களில் விசேட பெரியவெள்ளி சிலுவைப்பாதை இடம்பெற்றன.
நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பெருமளவான கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர்.

நேற்றைய தினம் புனித வியாழன் விசேட திருப்பலி மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் ஜோசெப் பொன்னையா ஆண்டகையினால் ஒப்புகொடுக்கப்பட்டது
இயேசு பிரான் யூதர்களினால் சிலுவையில் அறைந்து கொல்லப்படுவதற்கு முதல் நாள் இரவு தனது சீடர்களின் பாதங்களை கழுவி சீடர்களுடன் இறுதி இராப் போசன உணவு உண்ட நாளாகவும் கருதப்படுகிறது.
மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் புனித வியாழன் விசேட திருப்பலி மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் ஜோசெப் பொன்னையா ஆண்டகை தலைமையில் பங்குத்தந்தை ஜோர்ஜ் ஜீவராஜ் அடிகளாருடன் அருட்தந்தையர்கள் இணைந்து ஒப்புக்கொடுக்கப்பட்டன .
விசேட திருப்பலியில் பெருமளவான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here