இலங்கைத் தமிழ் இந்துக்களுக்கு நீதி கோரி இந்தியாவின் டில்லியில் இந்து அமைப்புகள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தன.
இதில் ஆலயங்கள் இடிக்கப்படுவது மற்றும் இந்துக்களுக்கு தீங்கு இழைக்கப்படுவது ஒரு கலாசார இனப்படுகொலை எனவும் இந்து அமைப்புக்களால் சுட்டிக்காட்டப்பட்டது.
தற்போதைய அரசு தொல்லியல் ஆய்வு, வளர்ச்சி மற்றும் உற்பத்தி பணிகள் என்ற பெயரில் கோவில்களின் தோற்றத்தைக் கெடுத்து, அவற்றை இடிப்பது சகிக்க முடியாத குற்றமாக கருதப்படுவதாக போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.
மேலும் இது இந்துக்களுக்கும், இந்தியாவுக்கும் எதிரான தீங்கிழைக்கும் செயல் என இந்துப் போராட்டக் குழுவின் சர்வதேசத் தலைவர் ஸ்ரீ அருண் உபாத்யாய், கண்டனம் வெளியிட்டுள்ளார்.
மேலும் இந்திய அரசும் இந்தப் பிரச்சினையை உணர்ந்து இந்தியா செல்லவிருக்கும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கடுமையாக ஆட்சேபிக்க வேண்டும் என தெரிவித்தார்.