தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வட மாகாண சபை உறுப்பினர்கள் பலர் இன்று அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வட மாகாண சபை இளையோர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த உண்ணாவிரதப் போராட்டம் யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இடம்பெறுகின்றது.
தமிழ் அரசியல் கைதிகளினால் முன்னெடுக்கப்படுகின்ற சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவுக்கும் வகையில் இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
தமிழ் அரசியல் கைதிகளுக்கு உடனடியாக பொது மன்னிப்பு வழங்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்,வட மாகாண சபையின் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது