பிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற லு புளோமெனில் தமிழ்ச்சங்க 19 ஆவது ஆண்டு விழா நிகழ்வு!

0
710

பிரான்சின் லு புளோமெனில் தமிழ்ச்சங்க தமிழ்ச்சோலையின் 19 ஆவது ஆண்டுவிழா இன்று (26.03.2023) ஞாயிற்றுக்கிழமை இன்னியம் அணிவகுப்பு நிகழ்வோடு ஆரம்பமாகியது.

மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது.

பிரான்சு தேசியப் பண், தமிழ்ச்சோலைப் பண் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து லு புளோமெனில் தமிழ்ச்சோலை மாணவ மாணவியரின் கலை நிகழ்வுகள் ஆரம்பமாகின.

வணக்க நடனம், வரவேற்புரை, பேச்சு (தமிழ்மொழி), மதிப்பளிப்பு, எழுச்சி நடனம் (வன்னி வன்னிக் காட்டுக்குள்ளே), பாட்டு (அழகே அழகே..), தலைமையுரை, நடனம் (மாமா மாமா தலைவர் மாமா), பாட்டு (சிறகு விரிக்கும் பறவைக்கு இங்கே), நாடகம் (விழிப்புணர்வு ), கிராமிய நடனம் (பாலர் நிலை மாணவர்கள்), நடனம் (கௌத்துவம்), கவிஞரைப் போற்றுவோம் (மகாகவி உருத்திரமூர்த்தி), நடனம் (தமிழா நீ தமிழ் வாழப் பணியாற்று), நாடகம் (வெட்ட வெட்ட வளர்வோம்), பாடல் (அலைபாயுதே கண்ணா …), மதிப்பளிப்பு (ஆசிரியர்கள், திருக்குறள் திறன்போட்டி)

தனி நடிப்பு, கிராமிய நடனம் (கொண்டாடு கொண்டாடு…),முத்தமிழ் சங்கமம் (காலத்தை வென்ற தமிழ்), பாட்டு (தமிழீழத்தின் அழகு…), நாடகம் (வேர்கள்), கிராமிய நடனம் ( ஏலக்காய எடுத்து நெல்லு) கருத்தரங்கம் (ஊடகங்களில் தமிழ்), எழுச்சி நடனம் (பெண்ணின் வீரம்), பாட்டு (கார்கால மழையே), நாடகம் (கண்ணகி, வழக்காடு காதை), நடனம் (கடலே ஏன் கடலே …), நன்றியுரை, எழுச்சி நடனம் (வெட்டு ஒன்று துண்டு இரண்டு), தற்காப்புக்கலை போன்ற நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றிருந்தன.

தாயகத்தில் இருந்து வருகைதந்த நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் இந் நிகழ்வில் கலந்துகொண்டு தனது கருத்துக்களைப் பகிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – ஊடகப்பிரிவு)

(படங்கள்: யூட்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here