இரண்டாவது நாளாகத் தொடரும் 2014 தமிழ் அரசியல்கைதிகளின் உணவு தவிர்ப்புப் போராட்டம்!

0
159

aaaa-prisonஇலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள சிறைச் சாலைகளில் விசாரணையும் இன்றி விடுதலையும் இன்றி தடுத்து வைக்கப்பட்டு தமிழ் அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு கோரி இரண்டாவது நாளாகவும் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணம், கொழும்பு, மகசின், பூசா, வெலிக்கடை, தும்பறை, அநுராதபுரம், நீர்கொழும்பு என 14 சிறைகளில் உள்ள 2014பேர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தமது போராட்டத்தை இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றனர்.

தமது விடுதலைக்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் இதுவரையில் எதுவும் பலனளிக்கவில்லை என்று தெரிவித்துள்ள கைதிகள் புதிய ஆட்சியாளர்களும் தமது கோரிக்கை தொடர்பில் பாராமுகமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மகசீன் சிறைச்சாலைக்குச் சென்ற சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் புஸ்பகுமார ஹெட்டியாராச்சி எதற்காக போராட்டம் நடத்துகிறீர்கள் என்று வினவினார். பொதுமன்னிப்பு அடிப்படையில் தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்று இதன்போது தமிழ் கைதிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை கைதிகளின் உணவு தவிர்ப்பை கைவிட உறுதி மொழி வழங்குங்கள் என்றும் விசாரணையை துரிதப்படுத்துமாறும் வட மாகாண முதல்வர் ஜனாதிபதியை கோரியிருப்பது தமக்கு அதிருப்தி அளிப்பதாக சிறைக்கைதிகள் தெரிவித்துள்ளனர்.

தமக்கு விசாரணை வேண்டாம் என்றும் விடுதலையை வலியுறுத்தியே தாம் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். தாம் விசாரணை என்ற பெயரில் நீண்டகாலம் தடுத்து வைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மட்டக்களப்பு சிறைச்சாலையில் 9 தமிழ் அரசியல் கைதிகள் ஆரம்பித்துள்ள சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கிறது.

கடந்த திங்கட்கிழமை 12 ஆம் திகதி நள்ளிரவு 12மணியளவில் இக்கைதிகள் உண்ணாவிரத போராட்டத்ததை ஆரம்பித்திருந்ததாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

பயங்கரவாத சந்தேக நபர்களான இவர்கள் கடந்த 6 வருடங்களுக்கு மேல் சில கைதிகளும் 4 மற்றும் 2 வருடங்களுக்கு மேலாகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளாவர்.

தங்களை விடுதலை செய்யுமாறு கோரியே இக்கைதிகள் தாம் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூடங்களுக்குள்ளேயே சாகும்வரை உண்ணாவிரதத்தை நடாத்திவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here