பிரான்சில் இடம்பெற்ற நாட்டுப்பற்றாளர் பவுஸ்ரின் அவர்களின் 4-ம் ஆண்டு நினைவேந்தல்!

0
179

 –

பிரான்சில் 15.03.2019 அன்று திடீர் சுகயீனம் காரணமாக சாவடைந்த நாட்டுப்பற்றாளர் அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இன்று 15.03.2023 புதன்கிழமை முற்பகல் 15.00 மணிக்கு Grigny யில் அமைந்துள்ள கல்லறையில் உணர்வோடு இடம்பெற்றது.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஈகைச்சுடரினை நாட்டுப்பற்றாளர் அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களின் குடும்பத்தினர் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினர்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து அனைவரும் சுடர்ஏற்றி மலர்வணக்கம் செய்தனர்.

நினைவுரையினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு. மேத்தா அவர்கள் ஆற்றியிருந்தார்.

அவர் தனது உரையில், நாட்டுப்பற்றாளர் பவுஸ்ரின் அவர்களின் கடந்த காலப் பணிகளை நினைவு கூர்ந்ததுடன், அண்மையில் செல்தமிழ்ச்சங்க 25 ஆவது ஆண்டு விழாவின் போது அதன் உருவாக்கத்திற்குக் காரணமாக இருந்த நாட்டுப்பற்றாளர் பவுஸ்ரின் அவர்களைப் பாராட்டியிருந்தமையையும் நினைவுகூர்ந்திருந்தார்.

நாட்டுப்பற்றாளர் பவுஸ்ரின் அவர்களின் பிள்ளைகளையும் அப்பாவின் கனவை நனவாக்கப் பயணிக்க வேண்டும் என்பதையும் ஆவலோடு தெரிவித்திருந்தார். பிள்ளைகளும் தாம் அதனை நிறைவேற்றும் ஆவலோடு இருந்ததையும் உறுதி செய்ய முடிந்தது.

நிறைவாக தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு க் குழு – ஊடகப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here