சுவிசில் சிறப்பாக நடைபெற்ற தமிழீழ பெண்கள் எழுச்சி நாளும் மாவீரர்களின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வும்!

0
248

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் புதிய வரலாறு படைத்து இலட்சியக்கனவோடு சமராடி முதல் களப்பலியான பெண் போராளி 2வது லெப் மாலதி உட்பட்ட மாவீரர்களின் நினைவுகளைச் சுமந்த வணக்க நிகழ்வானது நேற்று பாசெல் மாநிலத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது.001-3-600x378

தாய்நாட்டின் விடுதலையோடு பெண்ணினத்தின் விடுதலையையும் கருத்திற் கொண்டு ஆயுதமேந்தி இந்திய வல்லாதிக்கத்திற்கெதிராக வீரப்பெண்ணாக விடுதலைக்காய் வீறு கொண்டெழுந்து, வித்தாகி வீழ்ந்த 2வது லெப் மாலதி அவர்களின் நினைவு நாளானது தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளாக நினைவுகூரப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டும் வருகின்றது. 002-3-600x384

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் வணக்க நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து மலர்மாலை அணிவித்தலுடன் ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு அகவணக்கம், மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.003-2-600x387004-1-600x336

மக்களால் மலரஞ்சலி, சுடர்வணக்கம் செலுத்தப்பட்ட சமவேளையில் மலர்வணக்கப் பாடல்கள் இசைக்கப்பட்டன.

தமிழீழப் பெண்களின் புரட்சிக்கு வித்திட்டவர்களின் நினைவுகள் சுமந்த இவ்வணக்க நிகழ்வின் எழுச்சி நிகழ்வுகளாக எழுச்சிப் பாடல்கள், இளையோர்களின் எழுச்சி நடனங்கள், காலத்தின் தேவை கருதிய சிறப்புரையோடு,

எமது பழம்பெரும் கலையான வில்லுப்பாட்டு நிகழ்வுடன் மாவீர வித்துக்களின் நினைவுகள் சுமந்த காணொளிக் காட்சித் தொகுப்பும் அகன்ற வெண்திரையில் காண்பிக்கப்பட்டதுடன்,

தமிழீழ பெண்கள் எழுச்சி நாளை முன்னிட்டு நடாத்தப்பட்ட பொது அறிவுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பதக்கங்களும், பரிசில்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டன.

நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி இறக்கலுடன், தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் எழுச்சியுடன் நிறைவுபெற்றன.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

 

 

 

007-1-600x309

008-1-600x337

009-1-600x384

011-1-600x385

012-1-600x786

https://youtu.be/Cde9C2LZMog

https://youtu.be/h18LLZWEAMM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here