குற்றச்சாட்டுக்கள் எதுவுமின்றி நீண்ட நாட்களாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் ஒரு வார காலத்திற்குள் விடுவிக்கப்பட வேண்டுமென, அரசாங்கத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலுவான கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து, இன்று முதல் கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், கூட்டமைப்பினர் அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நாளிலிருந்து கைதிகளின் விடுதலையை எதிர்பார்த்திருப்பதாக குறிப்பிட்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இனிமேலும் அவர்களை விடுவிப்பதில் அரசாங்கம் தாமதம் காட்டக்கூடாதென குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை ஒவ்வொரு சிறைச்சாலைகளுக்கும் சென்று திரட்டிவந்த சுமந்திரன், அதன் விபரங்களை ஏற்கனவே நீதியமைச்சரிடம் கையளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.