பிரான்சில் சிறப்போடு இடம்பெறும் “வன்னிமயில் – 2023″ இறுதி நாள் போட்டிகள்!

0
275

 –

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் கலை பண்பாட்டுக் கழகத்தின் ஆதரவில் பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் 12 ஆவது ஆண்டாக வன்னிமயில் – 2023 தேச விடுதலைப் பாடல்களுக்கான நடனப் போட்டி முதல் நாள் நிகழ்வுகள் கடந்த 25 ஆம் (சனி), 26 ஆம் (ஞாயிறு), மற்றும் 27 ஆம் (திங்கள்) நாள்களில் பாரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான புளோமெனில் பகுதியில் மிகவும் சிறப்பெழுச்சியாக இடம்பெற்று முடிந்த நிலையில் நேற்று (04.03.2023) சனிக்கிழமை நான்காம் நாள் இறுதிப் போட்டிகள் ஒள்னே சுபுவா பகுதியில் சிறப்பாக இடம்பெற்ற நிலையில் இறுதிப்போட்டிகள் இன்று 05.03.2023 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக இடம்பெறுகின்றன.

இன்று ஆரம்ப நிகழ்வாக மாவீரர் திரு உருவப்படத்திற்கு 15.01.197 அன்று பழம்பாசி நெடுங்கேணிப் பகுதியில் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவடைந்த கப்டன் குமணன் அவர்களின் பெற்றோர் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார். அகவணக்கத்தைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன.

தொடர்ந்து இறுதிப்போட்டிகள் சிறப்பாக இடம்பெறுகின்றன. மேலதிக விவரங்கள் பின்னர் வெளியாகும்.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)

(படங்கள்: யூட், வினுயன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here