சுவிசு நாட்டினுள் பயணிக்கும் மனித நேய ஈருருளிப் பயண அறவழிப் போராட்டம்!

0
105

13 நாளாக (01/03/2023) தொடரும் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் சுவிசு நாட்டினுள் பயணிக்கின்றது.

கடந்த 17/02/2023 பிரித்தானிய பிரதமரின் வதிவிடத்தின் முன் ஆரம்பித்து நெதர்லாந்தில் அமைந்திருக்கும் அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் நடைபெற்ற சந்திப்புக்களை அடுத்து சிறிலங்கா பேரினவாத சர்வாதிகார அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழ தனி அரசே நிரந்தர தீர்வு என்பதனையும் கோரிக்கைகளாக முன்னிறுத்தியவாறு ஈருருளிப்பயணம் தொடர்கின்றது. அத்துடன் நெதர்லாந்து, பெல்சியம், லக்சாம்பூர்க் , யேர்மனி , பிரான்சு ஆகிய நாடுகளில் பல முக்கிய அரசியற் சந்திப்புக்களை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

குறிப்பாக பிரான்சில் தொடர்ந்த இப்பயணம் நேற்று 01/03/2023 முல்கவுசு, சான் லூயி, நகரசபைகளிலும் முதல்வர்களை சத்தித்து தமிழர்களுடைய நியாயமான கோரிக்கை அடங்கிய மனுக்கள் கையளித்து மாலை 16.30 மணிப்பொழுதில் சுவிசு நாட்டினுடைய பாசல் நகர எல்லை சென்றடைந்து சுவிசு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரின் வரவேற்போடு எழுச்சிகரமாக இலக்கு நோக்கி பயணித்துக்கொண்டு இருக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here