பழம்பெரும் நடிகை மனோரமா உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78. தமிழ் சினிமாவின் ஆச்சி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை மனோரமா உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் காலமானார்.
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் நடாத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் மனோரமா முன்வரிசையில் அமர்ந்திருந்தமை நினைவிற்கொள்ளத்தக்கது.
எம்.ஜி.ஆர்., சிவாஜி முதல் தற்பேதைய இளம் நடிகர்கள் வரை உள்ள படங்களில் நடித்தவர் நடிகை மனோராமா. காமெடி, குணச்சித்திரம் என்று பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார்.
மனோரமா தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் பிறந்தவர்.
இவரது இயற்பெயர் கோபி சாந்தா. பத்மஸ்ரீ, தமிழ்நாடு அரசின் கலைமாமணி, தேசிய திரைப்பட விருது போன்ற பல விருதுகளை பெற்றவர் மனோரமா. பின்னணி பாடல்களையும் பாடியுள்ளார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மனோரமா சனிக்கிழமை இரவு 11 மணியளவில் காலமானார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து கின்னஸ் சாதனை படைத்தார்.