2ம் லெப். மாலதி, வீரவேங்கை அன்ரன் உட்பட்ட 6 மாவீரர்களின் 28ம் ஆண்டு நினைவு நாள்!

0
786

malathiதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய வீரவேங்கை அன்ரன் உட்பட்ட ஆறு மாவீரர்களின் 28ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

10.10.1987 அன்று யாழ். கோட்டைப் பகுதியில் இந்தியப் படையினருடனான மோதலில்

வீரவேங்கை அன்ரன்

(இரத்தினம் பரமேஸ்வரன் -தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்.)

வீரவேங்கை நிமல்

(பொன்னையா பூபாலசிங்கம் –மிருசுவில், யாழ்ப்பாணம்.)

ஆகிய போராளிகள் வீரச்சாவைத்

தழுவிக் கொண்டனர்.

கோப்பாய் பகுதியில் இந்தியப்

படையினருடன் இடம்பெற்ற மோதலின்போது

2ம் லெப்டினன்ட் மாலதி

(சகாயசீலி பேதுறு –ஆட்காட்டிவெளி, மன்னார்)

2ம் லெப்டினன்ட் கஸ்தூரி

(வதனீஸ்வரி கோபாலப்பிள்ளை -வட்டக்கச்சி, கிளிநொச்சி)

வீரவேங்கை தயா

(செபஸ்ரியான் சலேற்றம்மா –பெரியநாவற்குளம், மன்னார்.)
வீரவேங்கை ரஞ்சி

(யோகம்மா கதிரேசு – ஓமந்தை, வவுனியா.)
malati

2ஆம் லெப். மாலதி 28 ஆண்டுகளுக்கு முன் அந்த இலட்சியக் கனவோடுதான் வீரச்சாவை தழுவிக் கொண்டாள். அந்த நடுராத்திரியில் வல்லாதிக்க இந்திய இராணுவத்தை எதிர்கொள்ள கோப்பாய் கிறேசர் வீதியில் காத்திருந்தாள். இந்திய இராணுவம் தமிழ் பெண்களுக்கு இழைத்த அநீதி இன்னமும் தமிழர் மனங்களில் ஆறாத காயமாகவுள்ளது. 1987 அக்டோபர் 10 ஆம் திகதி நள்ளிரவு 1 மணியளவில் இந்திய வல்லாதிக்க இராணுவம் மீது அவளது எம்16 ரக துப்பாக்கியில் குண்டுகள் சீறிப்பாய்ந்தன. அந்த தாக்குதல் 2 ஆம் லெப் மாலதியின் இறுதி தாக்குதல்.

புலிகள் போராட்ட வரலாற்றில் முதல் பெண் போராளி 2 ஆம் லெப் மாலதி வித்தாகி வீழ்ந்தாள். அதுவே தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாக அமைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here