இலங்கை அரசாங்கம் கொடுத்த திருத்தங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் காரணமாகத்தான் ஐ.நா. வின் பிரேரணை நிறைவேற்றப்பட்டிருப்பதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
மேலும், தீர்மானம் என்பது இலங்கை அரசாங்கத்திற்குச் சாதகமானதாக இருக்க முடியுமே தவிர, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்கான தீர்மானமாக அது இருக்குமா என்பது கேள்விக்குறியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.