மீனவர் பிரச்சினையை தீர்க்க முத்தரப்பு அணுகுமுறை அவசியம்: இரா.சம்­பந்தன்

0
759

Sampanthan-800x450இலங்கை – இந்­திய மீனவர் பிரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்கு அர­சாங்கம் டில்­லி­யுடன் மட்டும் பேச்­சு­வார்த்தை­ நடத்­தாது தமிழ்­நாட்டு முத­ல­மைச்­ச­ரு­டனும் பேச்­சு­வார்த்­தை­ நடத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் நேற்று சபையில் தெரிவித்தார்.
இலங்கை – இந்­திய கடற்­ப­டை­யினர் இணைந்து கூட்டுச் சேர்ந்து சேவையை மேற்­கொள்­வதன் மூலம் இந்­திய மீன­வர்கள் வட­ப­குதி கட­லுக்கு வரு­வதை தடுத்து நிறுத்த முடியும் என்றும் எதிர்க்­கட்சித் தலைவர் சபையில் குறிப்பிட்டார்.
இந்­திய மீன­வர்கள் இலங்கை கடல் எல்­லையில் அத்­து­மீறி மீன்பி­டிப்­பது தொடர்
பாக வெள்ளிக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் ஜே.வி.பி. எம்.பி விஜித ஹேரத்
முன்­வைத்த சபை ஒத்­தி­வைப்புவேளை பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்தகொண்டு உரை­யாற்றும் போதே எதிர்க்­கட்சி தலைவர் சம்­பந்தன் இவ்­வாறு தெரி­வித்தார்.
அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், இந்­திய மீன­வர்கள் எமது கடல் எல்­லையில் விசே­ட­மாக வட­ப­குதி கடல் எல்­லையில் அத்­து­மீறி “பொட்­டம்­ரோ­லர்­களை” பயன்­ப­டுத்தி மீன் பிடிக்­கின்­றனர். இதனால் எமது மீன் வளங்கள் அனைத்­தையும் இந்­திய மீன­வர்கள் அள்ளிக் கொண்டு போவ­தோடு எமது
கடல் வளமும் முழு­மை­யாக சுரண்­டப்­ப­டு­கி­றது. எமது மீன­வர்கள் இதனால் தமது வாழ்­வா­தா­ரத்தை இழக்­கின்­றனர்.
வட-­க்கு கி­ழக்கு மீன­வர்கள் இப்­பி­ரச்­சி்­னைக்கு முகங்­கொ­டுத்­துள்­ள­தோடு இப் பிரச்­சினை கார­ண­மாக இரு நாட்டு மக்­க­ளி­டை­யேயும் பகை­யு­ணர்வு ஏற்­ப­டு­கி­றது. எனவே இதனை தடுக்க அர­சாங்கம் காத்­தி­ர­மான நட­வ­டிக்­கை­களை எடுக்கவேண்டும்.
வெளி­வி­வ­கார அமைச்­ச­ருக்கு நான் வேண்­டுகோள் ஒன்றை விடுக்­கிறேன். அதா­வது மீனவர் பிரச்­சினை தொடர்­பாக டில்லி மத்­திய அர­சாங்­கத்­துடன் மட்டும் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தாது தமிழ் நாட்­டு­டனும் அதன் முத­ல­மைச்­ச­ரு­டனும் பேச்­சு­வார்த்­தை­களை நடதத் வேண்டும்.
இலங்கை, இந்­தியா, தமிழ்­நாடு என முத்­த­ரப்பு பேச்­சு­வார்த்­தைகள் நடத்த வேண்­டி­யது கட்­டா­ய­மா­ன­தாகும்.
அத்­துடன் இலங்கை கடற்­ப­டை­யி­னரும், கட­லோர காவல் படையும் இணைந்து கூட்டு ரோந்து நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்ள வேண்டும். இவ்­வா­றான நடவடிக்கைகளினால் இந்­திய மீனவர்கள் எமது கடல் எல்­லைக்குள் வருவதை தடுக்க முடி­வ­தோடு பிரச்­சி­னை­க­ளையும் குறைத்துக் கொள்ள முடியும்.
டில்­லியில் நான் இருந்த சந்­தர்ப்­பத்தில் அந்­நாட்டின் உயர் அதி­கா­ரி­க­ளுடன் இதுதொடர்பில் கலந்­து­ரை­யா­டினேன். இதன்­போது அவர்கள் தெரி­வித்த கருத்தானது இந்­திய, இலங்கை மீன­வர்கள் அனை­வ­ரையும் ஆழ்­க­டலில் மீன்­ப­டிப்­ப­தற்கு பழக்­கப்­ப­டுத்த வேண்டும் என்பதாகும்.
அதற்­கான தொழில்­நுட்ப உத­வி­களை வழங்­கவும் தாம் தயா­ராக இருப்­ப­தா­கவும் தெரி­வித்­தனர்.
இப் பிரச்­சி­னையை தொட­ர­வி­டக்­கூ­டாது, இது எமது மீன­வர்­களின் வாழ்­வா­தாரப் பிரச்­சினை. எனவே விரை­வாக தீர்க்க நட­வ­டிக்­கை­களை அரசு மேற்­கொள்ள வேண்டும். வடக்கு மீன­வர்­களின் வாழ்­வா­தாரம் பாது­காக்­கப்­படும் என ஜனா­தி­பதி உறு­தி­ய­ளித்­துள்ளார். அது நிறை­வேற்­றப்­பட வேண்டும் அதனை விரைவு படுத்த வேண்டும்.
யுத்த காலத்தில் வடக்கு கிழக்கு மீன­வர்கள் கடலில் மீன்­பி­டிப்­பது தடுக்­கப்­பட்­டது. இக்­கால கட்­டத்தில் அம் மக்கள் கடன் வாங்­கியே வாழ்க்கை நடத்­தினர். அப்­போது எமது கடல் எல்­லையில் மீன்­பி­டியில் இந்­திய மீன­வர்கள் ஈடு­பட்­டனர்.
இன்று யுத்தம் முடிந்து விட்­டது எமது மீன­வர்கள் மீண்டும் கட­னா­ளி­களாகி மீன்­படி உப­க­ர­ணங்­களை கொள்­வ­னவு செய்து மீன்­பி­டிக்க முயற்சிக்­கின்­றனர். ஆனால் அவர்­க­ளுக்கு மீன்கள் கிடைப்­ப­தில்லை. இந்­திய மீன­வர்கள் எமது மீன்களை அள்ளிக் கொண்டு போகின்றனர். அதனால் மீன் வளங்கள் குறைந்து போகின்றன. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் முறைகளால் மீன் உற்பத்தி அழிகிறது.
எனவே எமது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கஷ்டத்துடன் வாழ்கின்றனர். இதனால் அரசாங்கம் உடனடியாக முத்தரப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here