பிரான்சு செல் தமிழ்ச்சங்கத்தின் 25ஆவது ஆண்டுவிழா!

0
243

பிரான்சு பாரிசின் புறநகரில் ஒன்றான செல் பிரதேசத்தில் தமிழ்ச்சங்க 25ஆவது ஆண்டுவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெறுகின்றது.

அகவணக்கத்தைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது.

தமிழ்ச்சோலைக்கீதம் (பாலர் நிலை மாணவர்கள்), வரவேற்புரை, வரவேற்பு நடனம் (வருகவே வருகவே), வழக்காடு மன்றம் (அழகான நாட்கள் வ.த 06), ஒயிலாட்டம் (வ.த 01), சிறப்புரை (நிர்வாகி),குறத்தி நடனம் (வ.த 03) 10.நாடகம் (நிறங்கள் வ.த 07), மதிப்பளிப்பு (12 வருட தமிழ் கற்றல் பூர்த்தி செய்த மாணவர்கள்), தலைமையுரை, உழவர் நடனம் (வ.த 03), சக்கரங்கள் (சமூக நாடகம் வ.த 08.10), ஆங்கிலப் பாடல் (I have a dream)

சிறப்பு விருந்தினர் உரை, எழுச்சி நடனம் (பாத சலங்கை), கோலாட்டம் (லாலா கோல்கள் ஆடுவோம் வ.த 04), சான்றிதழ் வழங்குதல் (தொடர்ச்சியாக தமிழ் மொழித் தேர்வில் 03 தடவைகள் அதிதிறன் பெறுபேற்றைப்பெற்ற மாணவர்கள்), கிராமிய நடனம் (வ.த 02), விசேட மதிப்பளிப்பு, நாடகம் (இயற்கையின் நியதி வ.த 09.11.12), கௌரவ விருந்தினர் உரை, கிராமிய நடனம் (இயற்கை அன்னை வ.த 05), பாரதியின் கனவு (உரையாடல் நாடகம் வ.த 02), வெள்ளி விழா நினைவுச் சின்ன வெளியீடு, எழுச்சி நடனம் (வீழ மாட்டோம்), தொகுப்புரை, நன்றியுரை, நல்வாய்ப்புச் சீட்டிழுப்பு, தமிழ் மொழி வாழ்த்து, போன்ற நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெறுகின்றன.

செல் மாநகர முதல்வர் துணை முதல்வர் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here