9-ம் நாளாகத் தொடரும் மனித நேய ஈருருளிப் பயண அறவழிப் போராட்டம் பிரான்சை வந்தடைந்தது!

0
127

கடுமையான புறச்சூழலில் பெரும் சவால்களுக்கு மத்தியில் தொடர்ந்த அறவழிப்போராட்டம் 26 தடவையாக பயணிக்கின்றது. சிறிலங்கா பேரினவாத அரசிற்கு சர்வதேசம் நெருக்கடிகளை உருவாக்கும் வண்ணம் தமிழீழ மக்களின் தொடர் அறவழிப்போராட்டங்களும் உயர்மட்ட அரசியற் சந்திப்புக்களும் அமையப்பெற்று வருகின்றன.

கடந்த 17/02/2023 பிரித்தானியாவில் பிரதமர் இல்லத்தின் முன் ஆரம்பித்து நெதர்லாந்து அனைத்துலக குற்றவியல் நீதி மன்றம் ஊடாக பயணித்து கடந்த 20/02/2023 பெல்சியத்தின் தலை நகரினை வந்தடைந்தது இவ்வறவழிப்போராட்டம். சம நேரத்தில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத் தலைவியின் ஆலோசகரினையும், வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சின் பொறுப்பதிகாரிகள், ஐரோப்பிய ஆலோசனை அவை அதிகாரிகளுடன் நடைபெற்ற நீண்ட உரையாடலில் பல பிரதானமான விடயங்கள் எடுத்தியம்பப்பட்டன.

குறிப்பாக, சிறிலங்கா பேரினவாத அரசு நிகழ்த்திய திட்டமிட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை மற்றும் தமிழர்களின் பூர்வீக நாடாகிய தமிழீழத்தின் விடுதலை, குற்றவாளிகளுக்கு பயண மற்றும் பொருளாதார தடை குறித்து விவரிக்கப்பட்டு அவை நம்பிக்கையான அடுத்த நகர்விற்கும் வழிவகுத்தன. தொடரும் இப்போராட்டம் லுக்சாம்பூர்க் , யேர்மனி நாடுகள் ஊடாக பிரான்சு நாட்டின் எல்லையினை வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது. பிரான்சில் இன்று பிரான்சு காவல்துறையின் பாதுகாப்புடன் கம்சயிம், லா வன்சுனு முதல்வர்களிடத்தில் எமது கோரிக்கை அடங்கிய மனு கையளிக்கப்பட்டு, பின் ஈருருளிப் பயணம் இன்றைய நாளில் 100 கிலோமீற்றர்களைக் கடந்து சில்றிக்காம் என்னும் இடத்தில் நிறைவுக்கு வந்தது.

நாளை மீண்டும் இப்போராட்டம் இலக்கினைத் தாங்கிய படி ஐ.நா நோக்கி நகரும்.

“நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரியது”

தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here