கோத்­தா­விடம் 3 மணிநேரம் விசா­ரணை!

0
217

kothaaமுன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாயவிடம் நேற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்­பி­லான ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்குழு விசா­ர­ணை­களை மேற்­கொண்­டது.
ரக்ன லங்கா பாது­காப்பு நிறு­வ­னத்தின் ஊழி­யர்­களை தேர்தல் கட­மை­க­ளுக்­காக பயன்­ப­டுத்­தி­ய குற்றச்சாட்டு தொடர் பில் நேற்­றைய தினம் இந்த விசா­ர­ணைகள் கொழும்பு, பண்­டா­ர­நாயக்க ஞாபகார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­டப வளா­கத்தில் உள்ள ஜனா­தி­பதி விசா­ரணை
ஆணைக்குழுவின் அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்­றன.
நேற்று காலை ஒன்­பது மணிக்கு ஆணைக் குழு முன்­னி­லையில் ஆஜ­ரா­கு­மாறு கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ­வுக்கு அறி­வு­றுத்­தப்­பட்­டி­ருந்த நிலையில் அவர் அங்கு ஆஜ­ரா­கி­யி­ருந்தார். அவ­ரிடம் நண்­பகல் 12.00 மணி வரை சுமார் 3 மணி நேரம் விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் அவர் அங்கிருந்து வெளியேறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here