வடமாகாண அமைச்சுக்களுக்குட்பட்ட திணைக்களம் மற்றும் சபைகளின் வாகனங்களில் மாகாண சபையின் இலட்சனை பொறிக்கப்பட வேண்டும் என அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
வடமாகாண அமைச்சுக்களுக்குட்பட்ட திணைக்களம் மற்றும் சபைகளின் வாகனங்களில் பெரும்பாலும் மத்திய அரசின் இலட்சினை மாத்திரம் காணப்படுவதாகவும் அதனுடன் மாகாண சபையின் இலட்சனையும் பொறிக்கப்படவேண்டும் என அவர் தெரிவித்தார்.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.