ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 52 வது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் சூழலில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்டுவருகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும் கடந்த (17.02.2023 ) காலை 10 மணியளவில் பிரித்தானிய இல்லத்துக்கு முன்பாக ஆரம்பித்து ,பிரதமர் அலுவலகத்திலும் வெளிவிவகார அமைச்சகத்திலும் மனுவைக் கையளித்த பின்னர் ஐ . நா நோக்கி ஈருருளிப்பயணம் ஆரம்பிக்கப்பட்டதோடு,சம நேரத்தில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி நெதர்லாந்திலிருந்தும் மனித நேய ஈருருளிப்பயணம் ஆரம்பமாகியிருந்தது.
இந்த மனித நேய ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் டென் ஹாக் நகரில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் ( International Criminal Court) முன்பாக கனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்று, பெல்சியம் நோக்கி பயணித்து,புரூசல் மாநகரத்தில் அமைந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்றின்முன் கவனயீர்ப்புப் போராட்டத்துடன் ஈருருளிப்பயணம் தொடர்ந்தும் பயணித்து நாமன் என்ற இடத்தில் நிறைவுபெற்றது.இன்று காலை நாமன் நகரத்திலிருந்து அகவணக்கத்தோடு ஆரம்பமானது.