வடமாகாண சபைக்கு முன் தொண்டர் ஆசியரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

0
187

வடமாகாண சபைக்கு முன்பாக தொண்டர் ஆசியரியர்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் 36ஆவது அமர்வுகள் இன்று வடக்கு மாகாணசயையில் இடம்பெற்று வரும் நிலையிலேயே, இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் தாம் தொண்டர் ஆசிரியர்களாக சேவையாற்றி வரும் நிலையில், தமக்கு நிரந்திர நியமனம் வழங்கக் கோரியே இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைதீவு, ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

vanni-teachers-protest-1-600x360 vanni-teachers-protest-2-600x360 vanni-teachers-protest-3-600x360

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here