யாழ்ப்பாணம் தொடருந்தின் முன்பாகப் பாய்ந்த வயோதிபர் மரணம்!

0
177

Sri_Lankan_trainயாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற யாழ்.தேவி தொடருந்தின் முன்பாகப் பாய்ந்த வயோதிபர் ஒருவர் இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் திருநகரைச் சேர்ந்த தேவசகாயம் ஏனோல்ட் (வயது 82) என்பவரே தற்கொலை செய்து கொண்டவராகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் சம்பவம் தொடர்பில தெரியவரவது,

இன்று காலை 6.40 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற யாழ்.தேவி ரயில் யாழ். மாவட்ட செயலகத்துக்கு அருகில் சென்ற போது அதன் முன்பாகப் பாய்ந்துள்ளார்.

இவருடைய சடலம் உடனடியாகவே ரயில்வே பாதுகாவலர்களினால் அதே ரயிலில் எடுத்து செல்லப்பட்டு நாவற்குழி புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

நாவற்குழி புகையிரத நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட்டது.

போதனா வைத்தியசாலையில் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்ட வருடங்களாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த அவர் அடிக்கடி சாகப்போவதாக கூறி வந்துள்ளார் எனவும், ஒரு தடவை தன்னைத்தானே வயிற்றில் கத்தியால் குத்தி தற்கொலை செய்ய முயன்றார் எனவும் கடந்த ஆறு மாத காலத்துக்கு முன்னர் கழுத்தை பிளேட்டினால் வெட்டி தற்கொலை செய்ய முயன்றார் எனவும் மரணவிசாரணையின் போது உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here