உக்ரைனின் பல்வேறு பகுதிகளிலும் ரஷ்யா மீண்டும் சரமாரி ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது.
கடந்த புதன்கிழமை இரவிலிருந்து வியாழக்கிழமை அதிகாலை வரை விடிய விடிய நடத்தப்பட்ட இந்தத் தாக்குலுக்கு பல்வேறு ரகங்களைச் சேர்ந்த ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்தியுள்ளது.
உக்ரைன் நிலைகள் மீது ரஷ்யா மொத்தம் 36 ஏவுகணைகளை வீசியது. அதில் 16 ஏவுகணைகளை உக்ரைன் வான்பாதுகாப்பு ஏவுகணைகள் இடைமறித்து அழித்தன. எஞ்சிய ஏவுகணைகள் தங்கள் இலக்குகளைத் தாக்கின என்று உக்ரைன் இராணுவ தலைமை தளபதி வாலெரி ஸலுஷனீ தெரிவித்துள்ளார்.
இதுவரை ரஷ்யா வீசிய ஏவுகணைகளை உக்ரைன் வான்பாதுகாப்பு ஏவுகணைகள் அதிக அளவில் இடைமறித்து அழித்துள்ளன. அதனுடன் ஒப்பிடும்போது தற்போது குறைந்த அளவிலேயே ரஷ்ய ஏவுகணைகள் அழிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நாட்டின் வடக்கு, மேற்கு, தெற்கு, கிழக்கு, மத்தியப் பகுதிகளைக் குறிவைத்து ரஷ்ய ஏவுகணைகள் வீசப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.