நோயால் அவதியுற்ற மூதாட்டி ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா – தவசிக்குளத்தைச் சேர்ந்த எஸ்.நிர்மலாதேவி (வயது -69) என்பவரே இவ்வாறு மரணமானவராவார்.
கடந்த சில நாட்களாக நோயால் அவதியுற்று வந்த இவர், நேற்றுப் பகல் தம்மால் நோயைத் தாங்க முடியவில்லை என்றும் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் என்றும் வீட்டாரிடம் கூறியுள்ளாராம். காலையில் அவரைக் காணவில்லை எனத் தேடிய போதே அவர் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்தமை தெரிய வந்தது. மேலதிக விசாரணைகளைப் வவுனியா பொலிஸார் நடத்தி வருகின்றனர். –