பிரித்தானியாவில் ஐ.நா. நோக்கிய மனித நேய ஈருருளிப் பயணம் ஆரம்பம்!

0
168

மனித உரிமைகள் ஆணையகத்தின் 52 வது கூட்டத்தொடரில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும் இன்று காலை 10 மணியளவில் பிரித்தானிய இல்லத்துக்கு முன்பாக, பிரதமர் அலுவலகத்திலும் வெளிவிவகார அமைச்சகத்திலும் மனுவைக் கையளித்த பின்னர் ஐ . நா நோக்கி ஈருருளிப்பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து Conservative, Labour தலைமையகங்களில் சந்திப்புகள் மேற்கொள்ளப்பட்டு மனு கையளிக்கப்படவுள்ளது. அதனையடுத்து, எமது நீதிக்காய் காத்திரமான பங்களிப்பை வலியுறுத்தியவாறு தொடரும் பயணமானது, Liberal Democrats கட்சியின் தலைவருடன் Kingston பணியகத்தில் அரசியற் சந்திப்பை
தொடர்ந்து அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம், ஐரோப்பிய பாராளுமன்றம் ஊடாக 06.03.2023 அன்று ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபையை சென்றடையவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here