தலதா மாளிகைக்கு சொந்தமான 50 கோடி ரூபா மதிப்புள்ள தங்கமும், ஒன்பது கோடி மதிப்பிலான நிலத்தினையும் விற்று முழுப்பணத்தினையும் மகிந்த ராஜபக்சவிடம் வழங்கியதாக தலதா மாளிகையின் முன்னாள் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் தலதா மாளிகைக்கு சொந்தமான 50 கோடி மதிப்புள்ள தங்கத்தினையும்,ஒன்பது கோடி மதிப்பிலான நிலத்தினையும் விற்று முழுப்பணத்தினையும் நானே எனது கைகளினால் எண்ணி மூட்டைகளாக கட்டினேன்.
இந்த பணத்தினை தலதா மாளிகையின் தியவதன நிலமே தேல அலரி மாளிகைக்கு எடுத்துச்சென்றார். இதன்போது நானும் சென்றேன். ஆனால் வாகனத்திலேயே என்னை உட்கார வைத்து விட்டு தியவதன நிலமே மாத்திரம் அலரி மாளிகைக்கு சென்று மகிந்தவிடம் பணத்தினை கொடுத்துவிட்டு வந்தார்.
தலதா மாளிகையின் நாளொன்றிற்கான வருமானம் 20 இலட்சம் ரூபாய். ஆனால் இந்த பணம் எங்கு செல்கின்றதென்பது தெரியாது. இது தொடர்பில் மகாநாயக்க தேரர்களுக்கும் நான் கூறியிருக்கின்றேன்.
நான் எனது பிள்ளைகளுக்கும்,எதிர்கால சந்ததியினருக்கும் நாட்டை சரியான முறையில் கையளிக்க வேண்டும் என்ற மனவேதனையில் இதனை நான் தெரிவிக்கின்றேன்.
நான் தேர்தல் சமயத்தில் பொய்யான கருத்துக்களை வெளியிடவில்லை. மகிந்தவும்,கோட்டாபயவும் தலதா மாளிகையில் கொள்ளையிடித்த முழு விபரமும் எனக்கு தெரியும். நான் யாருக்கும் பயமில்லை. இதனை காணொளியாக பதிவு செய்து வெளியிடுங்கள்.
நான் மொட்டுக்கட்சியினரை எதிர்ப்பார்த்துள்ளேன்.தேர்தல் காலத்தில் இந்த பக்கம் யாரும் வந்தால் நன்றாக கூறுவேன்.யாரும் இந்த பக்கம் வரவேண்டாம்.
மகிந்த,கோட்டாபயவின் அனைத்து இரகசியங்களும் எனக்கு தெரியும் என்பதனால் என்னை பழிவாங்குகின்றார்கள்.நான் கடும் மன வேதனையில் உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.