தமிழகத்தில் முதன்முறையாக புலிச் சின்னத்துடன் கூடிய சோழர் கல்வெட்டு ஒசூரில் கண்டறியப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஒசூர் சந்திர சூடேஸ்வரர் கோயிலில் நடத்திய ஆய்விலேயே இந்தக் கல்வெட்டு கண்டறியப்பட்டது. சேர, சோழ, பாண்டியர்கள் முறையே வில், புலி, மீன் ஆகியவற்றை தங்களின் அரசு சின்னங் களாகக் கொண்டிருந்தனர்.
மன்னர்கள் வெளியிடும் காசுகள், செப்பு பட்டயங்களில் மட்டுமே அவர்களது சின்னங்கள் காணப்படும். கல்வெட்டு களில் அரசு முத்திரைகளை காண்பது அரிதாகும். வில் சின்னமானது விடுகாதழகிய பெருமானின் குந்துக்கோட்டை, ராயக்கோட்டை போன்ற கல்வெட்டுகளிலும், மீன் சின்னமானது பாண்டியன் பெயரில் அமைந்த தெரு பெயர்கொண்ட திருவண்ணாமலை போன்ற சில இடங்களிலும் புலிச் சின்னமானது பெண்ணேஸ்வர மடக் கல்வெட்டிலும் மட்டுமே இதுவரை கண்டறியப்பட்டுள்ளன.
இந்த நிலையிலேயே சந்திரசூடேஸ்வரர் கோயிலின் தெற்கு நுழைவாயிலில் புலி சின்னம் கண்டறியப்பட்டுள்ளது.
இது முதலாம் குலோத்துங்க சோழனின் (பொது ஆண்டு 1070-1120) கல்வெட்டாகும்