ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட ஐரோப்பியத் தலைவர்கள் சிலர் விமானங்களை அனுப்ப உறுதி அளித்துள்ளதாக உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) கூறியிருக்கிறார்.
பெல்ஜியத் தலைநகர் பிரசல்ஸில் (Brussels) அவர் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களிடம் முதன்முறையாக நேரடியாக உரையாற்றினார்.
ஒன்றியத்தில் சேர இன்னும் நீண்டநாள் பிடிக்கும் என்று திரு. ஸெலென்ஸ்கியிடம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்னும் திறன்வாய்ந்த ஆயிரக் கணக்கான ராணுவ வீரர்கள் ரஷ்யத் தரப்பில் சேர்ந்துள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.
உக்ரேனில் தனது படையினர் முன்னேறிச் செல்ல உதவும் வகையில் மாஸ்கோ ஏராளமான ஏவுகணைகளைப் பாய்ச்சி வருகிறது.
டோன்பாஸில் (Donbas) உள்ள கிரிம்மீ்னா (Kreminna) நகரில் சண்டை தீவிரமடைந்துள்ளது.