–
முல்லைத்தீவு நகரில் சுற்றுவட்டம் மற்றும் பொது சந்தைப்பகதியில் கட்டப்பட்ட இரண்டு போஸ்டர் கட்டவுட்டுக்கள் ப.ரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீலங்காவின் சுதந்திரதினம் கரிநாளாக தமிழர்கள் அனுஸ்டிக்கப்பட்டு கொண்டிருக்கும் இன்றைய நாளில் முல்லைத்தீவு நகரில் 75 ஆவது இலங்கையின் சுதந்திர தினத்திற்கு வாழ்த்துத் தெரிவித்து முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் அவர்களின் படம் பொறிக்கப்பட்ட பதாகைகள் இரண்டு இடங்களில் கட்டப்பட்டுள்ளன.
இது பிரதேச மக்களையும் தமிழரசு கட்சியின் தொண்டர்களையும் பெரும் ப.ரபரப்பிற்கு உள்ளாகியுள்ளது.
சுதந்திர தினத்திற்க எதிர்ப்பு தெரிவித்து தமிழ் அரசு கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் நடக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கலந்துகொண்டிருக்கும் இந்த நிலையில் அவரை பிடிக்காதவர்களே இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக தமிழரசு கட்சியின் தொண்டர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த சம்பவத்தினை தமிழ் அரசு கட்சியின் தொண்டர்களுக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து கட்சியின் தொண்டர்களால் குறித்த பதாகை அகற்றப்பட்டுள்ளது.