தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நிகழ்வுகள் பிரான்சின் பல இடங்களில் வாழும் தமிழ்மக்கள் தமிழ்ச்சங்கங்கள் தமிழ்ச்சோலை மாணவர்களால் நடாத்தப்பட்டது. 93 மாவட்டத்தில் பொண்டி நகரத்தில் 22.01.2023 ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள தமிழ்ச்சோலை மண்டபத்தில் தமிழ்ச் சங்கத்தினர் பெற்றோர் ஆசிரியர்களால் பொங்கல் நிகழ்வு நடைபெற்றது. மாநகர முதல்வர் மற்றும் துணை முதல்வர், மற்றும் முக்கியஸ்தர்கள், மாநகரசபை ஆலோசகர் செல்வி. பிறேமினி தமிழர்களின் உடைகள் அணிந்து கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தது டன் பொங்கல் பொங்கி மகிழ்ந்தனர். மாணவர்களின் கலைநிகழ்வுகள் நடைபெற்றன. மாணவர்களுக்கு சான்றிதழ்களும் ஆசிரியர்களால் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர். பொண்டி வாழ் மக்கள், தமிழ்ச்சோலைக் குழந்தைகள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.